குழந்தைகளுக்கான பல் பராமரிப்பு மற்றும் பற்கள்
சம்பந்தமான பயனுள்ள தகவல்கள்
குழந்தையின் சிரிப்புக்கு மயங்காதவர் யாருமே இருக்க
முடியாது. குழந்தையின் பற்களை ஆரம்பத்திலிருந்து பராமரிக்க வேண்டியது அவசியம். இதில்
பெற்றோர் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். குழந்தை பிறந்தவுடன் ஆறு மாதங்கள் கழிந்த
நிலையில் பால் பற்கள் எனப்படும் தற்காலிக பற்கள் (milk tooth or temporary tooth)
வளர ஆரம்பிக்கும். பால் பற்கள் நிரந்தரப்
பற்களைக்காட்டிலும் வெண்மையாகவும் அழகாகவும் காணப்படும். சில குழந்தைகளுக்குப் பல்
முளைப்பதில் தாமதம் ஏற்படலாம். இதற்குக் கவலைப்படத் தேவை இல்லை
இரண்டரையிலிருந்து மூன்று வயதுக்குள் கிட்டத்தட்ட எல்லா பற்களுமே
வளர்ந்திருக்கும். அந்த வயதில்தான் அம்மாக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். குழந்தைகளுக்கு பல் முளைக்க ஆரம்பித்ததும், அலட்சியமாக
இருக்காமல், பற்கள் முளைக்கும்போது,
ஈறில் உறுத்தல் இருக்கும். இதனால், கையில் கிடைத்ததை எல்லாம் குழந்தை, வாயில்
போட்டுக்கொள்ளும். ஆகவே, வயிற்றுப்போக்கு, வாந்தி ஏற்படலாம். பெற்றோர்கள் இந்தத்
தருணத்தில் மிகவும் கவனமாகப் பார்த்துக்கொள்ள வேண்டும்.
பல் முளைக்கும் நேரத்தில்
குழந்தைகளின் ஈறுகள் சிவந்தும் வீங்கியும் காணப்படும். சில குழந்தைகளுக்கு
காய்ச்சல், வலி போன்றவையும் ஏற்படலாம். இது பொதுவான பிரச்னைதான் என்றாலும், பல்
மருத்துவரிடம் காண்பிப்பது நல்லது.
பொதுவாக இந்தப் பருவத்தில் புட்டிப் பால்
கொடுக்க ஆரம்பிக்கும் அம்மாக்கள், பால் பாட்டிலை குழந்தையின் வாயில் வைத்தபடியே
தூங்கச் செய்து விடுவார்கள். இதனால் குழந்தைகளின் பற்களில் அந்தப் பால்
படிந்துவிடும். எப்போதும் நம் வாயில் நிரந்தரமாக இருக்கும் ஸ்டிரெப்டோ காகஸ்
(strepto coccus) எனப்படும் பாக்டீரியாக்கள், பற்களில் படிந்திருக்கும் அந்தப் பாலோடு
வினை புரிந்து, கேரிஸ் (caries) எனப்படும் பற்சொத்தையை ஏற்படுத்தும். இதனை
'நர்ஸிங் பாட்டில் கேரீஸ்' (nursing bottle caries) என்று அழைக்கிறோம். சிறுவயதில் குழந்தைகளுக்கு பற்களில் பிரச்சனை உண்டானால் நிரந்த பற்கள்
முளைக்கும்போது சரியாகிவிடும் என குழந்தைகளின் பல் பராமரிப்பில் பல பெற்றோர்கள்
கவனம் செலுத்த மாட்டார்கள். இது முற்றிலும் தவறானது. பால் பற்கள், நிரந்தர
பற்களின் சக்தியையும் தாங்கி வளர்கின்றன என்பதால், இதில் ஜாக்கிரதையாக இருக்க
வேண்டும். குழந்தைகளுக்கு இப்படிப்பட்ட தொந்தரவு ஏற்படாமல்
இருக்க பால் குடித்த உடனே கொஞ்சம் தண்ணீர் கொடுத்து குடிக்க வைக்க வேண்டும். அல்லது ஈரப் பஞ்சினால் வாயையும், பற்களையும்
துடைத்துவிட்டோ, சுத்தம் செய்யலாம். இதனால், பற்சிதைவு தடுக்கப்படும்.பால்
பற்கள் விழுந்து குழந்தைக்கு நிரந்தரமான பற்கள் வளர ஆரம்பிக்கும் பருவத்திலும்
தாய்மார்கள் கவனமாக இருக்க வேண்டும். சில பால் பற்கள் விழாமல் இருக்கும்போதே அதே
இடத்தில் நிரந்தரமான பல் சற்று சாய்வாக முளைக்க ஆரம்பிக்கும். அப்படிப்பட்ட
தருணத்தில் இடையூறாக இருக்கும் பால் பற்களை டாக்டரிடம் சென்று நீக்கி விட
வேண்டும். நீக்கா விட்டால், பற்களில் அழுக்கு சேர்வது, நாக்குக்கு இடையூறாக பற்கள்
வளர்ந்து அதனால் பேச்சுக்கு இடையூறு ஏற்படுவது போன்றவை நிகழும்.
பெற்றோர்கள் குழந்தையின்
பற்களை தங்கள் விரலால் துலக்கி சுத்தம் செய்ய வேண்டும். குழந்தைகள் பிறந்த ஆறு
முதல் ஏழு மாதங்களில் பால் பற்கள் வளருவதால், அவர்களுக்கு ஈறு பகுதியில் எரிச்சலாக
இருக்கும். அந்த நேரத்தில், பெரும்பாலான குழந்தைகளுக்குக் காய்ச்சல் ஏற்படவும்
வாய்ப்பு உண்டு. இந்தப் பால் பற்களின் வளர்ச்சி ஏழாம் வயதில்தான் முடிவடையும்.
அந்த நேரத்தில் குறைந்தது 20 பற்களாவது குழந்தைகளுக்கு முளைத்திருக்க வேண்டும்.
ஏழாம் வயதின் முடிவில்தான் பால் பற்கள் விழ ஆரம்பித்து நிரந்தரமான பற்களின் வருகை
ஆரம்பிக்கும்.
இந்த நேரத்தில் குழந்தைகளின் தாடை மற்றும்
பற்களின் வேர் நன்றாகக் கடினமாக ஆரம்பிக்கும். குழந்தைகளுக்கு பல் முளைக்க
ஆரம்பித்ததும், அலட்சியமாக இருக்காமல், பெற்றோர்கள் குழந்தையின் பற்களை தங்கள்
விரலால் துலக்கி சுத்தம் செய்ய வேண்டும்.
அதோடு, குழந்தைகளுக்கு என்று பிரத்யேகமாக
விற்கப்படும் பற்பசையையும், பிரஷையும் வாங்கித் தந்து, அதைப் பயன்படுத்தச் சொல்லி
பழக்கவேண்டும். அவர்கள் பயன்படுத்தும் பற்பசையில் கால்சியம் மற்றும் ஃப்ளூரைடின்
அளவும் அதிகமாக இருக்க வேண்டும்.
பல் துலக்கும்போது 20 ஸ்ட்ரோக்கை மீறாமலும்,
இரண்டு நிமிடங்களுக்கு மேல் மிகாமலும், பல் துலக்கும் பழக்கத்தைச் சொல்லித்தர
வேண்டும். குறைந்த நேரத்தில் பல் துலக்கி, அதிக நேரம் வாய் கொப்பளிக்க
வேண்டும். கை சூப்பும் பழக்கம் உள்ள குழந்தைகளை, ஒரு வயதிற்குள் அந்தப்
பழக்கத்தை மறக்கச் செய்யவேண்டும்.
பற்களைத் துலக்குகிற விஷயத்தில் எல்லோரும்
செய்கிற தவறு பற்களை மட்டும் துலக்குவதுதான். பல் எத்தனை முக்கியமோ அதே அளவுக்கு
ஈறுகளும் முக்கியம். ஈறுகளுக்கும் பற்களுக்கும் இடையில் உள்ள சின்ன இடைவெளியில்
நாம் சாப்பிடும் பொருட்கள் தங்குவதுதான் ஈறு தொடர்பான பிரச்னைக்கு முதல் படி.
எனவே, குழந்தைகள் பல் துலக்கப் பழகும்போதே பல்லுக்கும் ஈறுகளுக்கும் உள்ள
இடைவெளியை சுத்தம் செய்ய சொல்லிக் கொடுக்க வேண்டும்.
குழந்தைகளை சாக்லேட் சாப்பிட அதிரடியாகத் தடை
போடாமல், சாப்பிடுகிற எண்ணிக்கையை மெதுவாகக் குறைக்க வேண்டும்.
அதிகப்படியான இனிப்பு உண்பதால் சொத்தைப் பல்
போன்ற பிரச்னைகள் ஏற்படும். இதுபோன்ற கிருமிகளுக்குப் பல்லை இரையாக்காமல் இருக்க,
சாப்பிட்டவுடன் நிறையத் தண்ணீரால் வாய் கொப்பளிக்க வேண்டும். அதே நேரத்தில்
நிறையத் தண்ணீரும் அருந்த வேண்டும்.
இரவு படுக்கும் முன் பாலில் சர்க்கரைச்
சேர்க்காமல் கொடுங்கள். காரணம், சர்க்கரையில் உள்ள இனிப்பு பற்களில் தங்கி,
சொத்தைப் பற்களை உருவாக்கிவிடும். படுக்கும் முன்பு பல் துலக்குவது அவசியம்.
உணவுகளை மென்று அசைபோட்டுச் சாப்பிடும்
பழக்கத்தைச் சொல்லிக் கொடுங்கள். இதனால், கன்னப் பகுதியும் ஒட்டிப் போகாமல் அழகாக
இருக்கும்
குழந்தைகள் விளையாடும்போது பல் உடைந்து போக
வாய்ப்புகள் அதிகம். இதனைத் தவிர்க்க கடுமையான பயிற்சியில் ஈடுபடும்போது, குத்துச்
சண்டை விளையாட்டில் பயன்படுத்தும் மௌத் கார்டினைப் பயன்படுத்தச் சொல்லலாம்.
பற்களின் வளர்ச்சிக்கு கால்சியம் நிறைந்த உணவு
முக்கியம். கூடுமானவரை
குழந்தைகளுக்கு இனிப்பு உணவுகளைக் குறைந்த அளவே கொடுப்பது நல்லது தினமும் உணவில் கீரை வகைகள், பட்டாணி, சுண்டல், ஆப்பிள், பச்சைக்
காய்கறிகள், பழங்கள், கீரைகள் போன்ற
உணவுகளை அதிக அளவு கொடுத்துப் பழக்கப்படுத்துவது, அவர்களின் உடல் நலத்துக்கும்
பற்களின் பாதுகாப்புக்கும் நல்லது. திணை
வகைகள் போன்றவற்றை அதிகமாகச் சேர்த்துக்கொள்ள வேண்டும். 'பல் போனால் சொல் போகும்' என்ற பழமொழியே நமது பல்லின் முக்கியத்துவத்தை
உணர்த்தும் அடிப்படையாக கூறப்பட்டது.. அப்படிப்பட்ட பற்களை குழந்தைப் பருவத்தில்
இருந்தே முறையாகப் பராமரிக்கத்தான் வேண்டும்.
சின்ன வயதிலேயே பற்கள் நீண்டு வளர்வதால் சிலருக்கு முக அமைப்பே மாறி அவலட்சணமாக
தோற்றமளிக்கும்.. பெரும்பாலும் குழந்தைப் பருவத்தில் விரல் சூப்புவதே இதற்குக்
காரணம். பால் பற்கள் விழுந்து நிரந்தரமான பற்கள் (permanent tooth) வளரும்
பருவத்தில் இந்தப் பழக்கம் தொடரும்போது பற்களின் நேரான வளர்ச்சிக்கு விரல்கள்
இடையூறாக இருப்பதால் பற்கள் தன் இயல்பை விட்டு விரல் சூப்பும் நிலைக்கேற்ப நீண்டு
வளர ஆரம்பிக்கும். எனவே, மூன்றில் இருந்து நான்கு வயது வரை குழந்தைகள் விரல்
சூப்பினால் பரவாயில்லை. அதற்கு மேல் அந்தப் பழக்கத்தை அனுமதிக்கக் கூடாது.
என்ன முயன்றும் விரல் சூப்புவதை விட முடியாத குழந்தைகளுக்கு சில தடுப்பு முறைகள்
உள்ளன. கிளிப் ட்ரீட்மென்ட் (clip treatment) எனும் சிகிச்சை உள்ளது. இந்த
சிகிச்சையில் துருப்பிடிக்காத சின்ன கிளிப்புகளை மேல் தாடையில் பொருந்தி விடுவதால்
அவர்களால் விரல் சூப்ப முடியாது. ஆனால், இந்த கிளிப்புகளை மாட்டிய பிறகு கடினமான
பொருட்களை சாப்பிட்டால் அவை உடைந்து போய் விடக் கூடும்.
குழந்தைகளுக்கு பால் பற்களில் சொத்தை
வந்துவிட்டால் அதை அடைத்து கொள்ள முடியும் முடிந்தவரை பற்களை பிடுங்க கூடாது அந்த பல்லை குழந்தைகளுக்கான பிரத்தியோக
சிமெண்ட் பயன் படுத்தி அடைத்துக்கொள்ளலாம்.
குழந்தைகளுக்கு பல் வலி வந்தால் அருகில் உள்ள
மெடிக்கல் கடைகளில் வலி மாத்திரைகளையோ
அல்லது டானிக் என மருத்துவர் ஆலோசனை இல்லாமல் வாங்கி தர கூடாது .
குழந்தைகளுக்கு பல் சொத்தை , வலி , கூச்சம் , ஈறு வீக்கம் , வாய் துர்நாற்றம் , ஈறு இரத்த கசிவு , எல்லா
பற்களில் சொத்தை , எல்லா பற்களும் தூள் தூளாக உடைந்து போதல் என எந்த வாய் பிரச்சனை வந்தாலும் உடனடியாக பல்
மருத்துவரை கலந்தாலோசிக்கவும்.
பொது நலன் கருதி வெளியிடுவோர்
G P பல் மருத்துவமனை
,
1426 ,பெரியகுளம் மெயின் ரோடு ,
தேனி . 625531.
தொடர்புக்கு 9944299224 , 8344444475.
குழந்தைகளுக்காக நமது
G P பல் மருத்துவமனையில் அளிக்கப்படும் பிரத்தியோக உலக தர சிகிச்சைகள்
ORAL HYGIENE INSTRUCTION AND EDUCATION
ROUTION CLEANINGS
MONITORING GROWTH AND DEVELOPMENT OF THE TEETH
AND JAWS
ORAL HABITS CORRECTION
STAINLESS STEEL CROWNS AND TOOTH COLOUR CROWNS
FULL MOUTH TREATMENT FOR SPECIAL CHILDRENS
FLUORIDE VARNISH GEL
PIT AND FISSURE SEALANTS
DIET COUNSELLING
CHILD FRIENDLY OPERATORY
SPORTS DENTISTRY
DIGITAL X-RAY
SURGICAL PROCEDURE THE TEETH , BONE AND SOFT TISSUES OF
THE ORAL CAVITY
REPAIRING OR FILLING OF DECAYING TEETH
FIXING DENTAL INJURIES ,INCLUDING FRACTURED,
DISPLACED,AND KNOCKED OUT TEETH .
TOOTH COLOURD FILLINGS
EXTRACTION
PULP THERAPY
SPACE MAINTAINERS/ EARLY ORTHODONTIC ASSESSMENTS
NITROUS OXIDE ( A K A LAUGHING GAS )
CONSCIOUS SEDATION
GENERAL ANESTHESIA DENTISTRY
.