கர்ப்பக்கால பல் பராமரிப்பு மற்றும் தகவல்கள்
1.கர்ப்பிணிகளின் பற்களில் பாதிப்பு இருந்தாலோ ஈறுகளில் வியாதி ஏற்பட்டாலோ அது கருவில் உள்ள குழந்தையை பாதிக்கும் பற்களை கவனிக்காமல் விட்டால் எடை குறைவான குழந்தை பிறக்கவும் மற்றும் குறை பிரசவம் ஆகவும் அதிக வாய்ப்புள்ளது .
2.ஹார்மோன் மாற்றங்களினால் கர்ப்பிணிகளுக்கு ஏற்படக்கூடிய ஈறு அழற்சி பிரச்னை மிகவும் சகஜம். இது 2வது, 3வது மாதத்தில் தொடங்கி, 8வது மாதத்தில் தீவிரமாகி, 9வது மாதம் குறைய ஆரம்பிக்கும். இதற்கு கர்ப்பகால ஈறு அழற்சி (pregnancy gingivitis) என்று பெயர். ஈறுகளில் வீக்கம், சிவந்து, ரத்தம் வடிதல் போன்றவை இதன் அறிகுறிகள். மற்ற ஈறு அழற்சி மாதிரிதான் இதுவும். கவனிக்கப்படா விட்டால், பற்களைச் சுற்றியுள்ள எலும்புகளை பாதித்து, திசு இழப்புக்கு வித்திடும். அரிதாக சில நேரங்களில் வீங்கிய ஈறு திசுக்களானது, அந்த இடத்தில் கட்டிகளைப் போன்று உருவாக்கலாம். அவை புற்றுநோய் கட்டிகள் அல்ல என்பதால் பயப்படத் தேவையில்லை. அந்தக் கட்டிகள் வலியின்றி இருக்கும். சில வேளைகளில் உணவுத்துகள்கள் அதன் அடியில் புகுந்து கொண்டு, வலியை ஏற்படுத்தலாம்.
3.பிரசவத்துக்குப் பிறகு இது மெல்லக் குறையத் தொடங்குமே தவிர, முற்றிலும் சரியாகாது. எனவே, பிரசவத்துக்குப் பிறகு, முழுமையான பல் பரிசோதனை அவசியம். முதல் 3 மற்றும் கடைசி 3 மாதங்களில் பல் சிகிச்சைகளைத் தவிர்க்க வேண்டும். அவசர சிகிச்சை இல்லை என்கிற பட்சத்தில், பிரசவமாகும் வரை அதைத் தள்ளிப் போடலாம்.
4.நீங்கள் எடுத்துக் கொண்டிருக்கும் மருந்துகள், அவற்றின் அளவுகள் பற்றி பல் மருத்துவரிடம் சொல்ல வேண்டும்.
5. டெட்ராசைக்ளின் போன்ற சில மருந்துகள், கருவிலுள்ள குழந்தையின் பற்களைப் பாதிக்கும் என்பதால், அவை கர்ப்ப காலத்தில் தவிர்க்கப்பட வேண்டும்.
6.எக்ஸ் ரே எடுப்பதும் தவிர்க்கப்பட வேண்டும்.
7.மசக்கை அதிகமுள்ள பெண்கள், அடிக்கடி வாயைக் கொப்பளிக்க வேண்டியது அவசியம். இல்லாவிட்டால் வாந்தி எடுப்பதால் உருவாகும் ஒருவித அமிலச்சுரப்பின் காரணமாக, பற்கள் பெரிய அளவில் பாதிக்கப்படலாம். பற்பசைகூட உபயோகிக்க முடியாத அளவு மசக்கை தீவிரமாக இருந்தால், மருத்துவரிடம் கேட்டு, சுவையற்ற பற்பசை வாங்கி உபயோகிக்கலாம்.
பொதுநலன் கருதி வெளியிடுவோர் என்றும் மக்களுக்கான மருத்துவ சேவையில்
GPபல்மருத்துவ மணை ,
1426,பெரியகுளம் மெயின் ரோடு ,
தேனி ,625531.
கைபேசி 9944299224, 8344444475.
பொதுநலன் கருதி வெளியிடுவோர் என்றும் மக்களுக்கான மருத்துவ சேவையில்
GPபல்மருத்துவ மணை ,
1426,பெரியகுளம் மெயின் ரோடு ,
தேனி ,625531.
கைபேசி 9944299224, 8344444475.



No comments:
Post a Comment